உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரபிரபை வாகனத்தில் பள்ளிகொண்டீஸ்வரர் வீதி உலா!

சந்திரபிரபை வாகனத்தில் பள்ளிகொண்டீஸ்வரர் வீதி உலா!

ஊத்துக்கோட்டை: சந்திரபிரபை வாகனத்தில், உற்வசர் பள்ளி கொண்டீஸ்வரர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டபள்ளி கிராமத்தில் உள்ளது, மரகதாம்பிகை சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். கடந்த, 10ம் தேதி, துவஜாரோகண நிகழ்ச்சியுடன், 10 நாள் சிவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது. காலை 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் பல்லக்கில் கோவிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மறுநாள் (11ம் தேதி), மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.தொடர்ந்து, யாக சாலை பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, சந்திர பிரபை வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று மாலை 6:00 மணிக்கு, உற்சவர் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !