மார்ச் 5ல் அழகர்கோவில் கள்ளழகர் தெப்பத்திருவிழா!
ADDED :3928 days ago
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கஜேந்திர மோட்சம் தெப்பத்திருவிழா மார்ச் 3ல் துவங்கி மார்ச் 5 வரை நடக்கிறது. கோயில் துணை கமிஷனர் வரதராஜன் கூறியதாவது: விழாவை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயார்கள் ஸ்ரீபூமிநீளா, ஸ்ரீகல்யாண சுந்தரவள்ளி கோயிலில் இருந்து புறப்பாடாகி மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைக்கரைப்பட்டி புஷ்கரணிக்கு எழுந்தருளி வழிநெடுகிலும் நின்ற சேவை சாதித்து அருள்பாலித்து தெப்பம் சேர்த்தியாகும்.மார்ச் 4ல் மாலை 6.45 மணிக்கு மேல் இரவு 7.15 மணிக்குள் கஜேந்திர மோட்சமும், மார்ச் 5ல் மதியம் 12.30 மணிக்கு மேல் 1.15 மணிக்குள் தெப்பத்தில் எழுந்தருளலும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் செய்துள்ளார்.