மரகத லிங்கத்திற்கு அபிஷேக, அர்ச்சனை!
ADDED :3928 days ago
ஆழ்வார்பேட்டை: சிவசுந்தரி கலைக்கூடத்தின் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி, மரகதப் பச்சை மகா சிவலிங்க மூர்த்திக்கு, அபிஷேக, அர்ச்சனைகள் நடைபெற உள்ளன. ஆழ்வார்பேட்டையில் உள்ள, சிவசுந்தரி கலைக்கூடம் சார்பில் இன்று (17ம் தேதி), மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மயிலாப்பூர், கிழக்கு மாட வீதியில் உள்ள, வாணிய தரும பரிபாலன மண்டபத்தில், மரகதப் பச்சை மகா சிவலிங்க மூர்த்திக்கு, அபிஷேக, அர்ச்சனைகள் நடக்கின்றன. ஸ்ரீருத்ர ஜெபம் அபிஷேகம், 1008 வில்வ அர்ச்சனை, தேவார தேனிசை, பைரவருக்கு அன்னப் படையலுடன் சிறப்பு வழிபாடு, திருவாசகம் ஓதுதல், சண்டேஸ்வர பூஜை, பிரசாதம் வழங்குதல் போன்ற வைபவங்கள் நிகழ உள்ளன.