சிவராத்திரி விரதமுறை!
ADDED :4285 days ago
சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள், காலை முதல் மாலை வரை சிவநாமங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். சாப்பிடக்கூடாது. இரவில் சிவாலயம் சென்று, நான்கு கால பூஜையிலும் சிவனை தரிசிக்க வேண்டும். பூஜை முடிந்தவுடன் சற்று நேரத்தில் உஷத் கால (அதிகாலை) பூஜை நேரம் வந்து விடும். அதோடு உச்சிக் கால பூஜையையும் சேர்த்து முடித்து விடுவர். பக்தர்கள் வீடு வந்து சிறிது நேரம் அமர்ந்த பின் குளிக்க வேண்டும். பின், சிவாயநம மந்திரம் ஜபித்து, திருநீறு அணிந்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மிஞ்சுவதை சாப்பிட்டு, விரதம் முடிக்க வேண்டும். (மிஞ்சும் அளவுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்) இவ்வாறு செய்தால் சிவனருளால் எல்லா நன்மையும் உண்டாகும். கன்னியர், இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சிறந்த மணவாழ்வு அமையும். மணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.