ஒரே நாள் விரதம் மூன்று கோடிக்கு சமம்!
ADDED :4285 days ago
60 நாழிகை அல்லது 24 மணி நேரம் கொண்டது ஒருநாள். ஒரு நாழிகைக்கு 24 நிமிடம். ஒரு நாளுக்கு 1440நிமிடங்கள். சூரிய உதயம் முதல் இரவு வரை தேய்பிறை சதுர்த்தசி திதி இருந்தால், யோக சிவராத்திரி நாள் என்பர். திங்கள்கிழமையன்று இரவு முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி இருந்தாலோ அல்லது திங்கள்கிழமை இரவு நான்காம் ஜாமத்தில் அமாவாசை திதி 12நிமிடம் இருந்தாலோ அன்றும் யோக சிவராத்திரி நாள்தான். சிவனுக்கு உகந்த நாள் திங்கள் என்பதால் இவ்வாறு வகுத்துள்ளனர். யோக சிவராத்திரி விரதமிருந்தால், மூன்று கோடி சிவராத்திரி விரதபலன் உண்டாகும் என்பது ஐதீகம்.