உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராணத்தில் சிவராத்திரி!

புராணத்தில் சிவராத்திரி!

ராத்ரி என்ற சொல்லுக்கு, அனைத்தும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என பொருள். எனவே தான், உயிர்கள் செயலற்று உறங்கும் நேரத்தை ராத்திரி என்கிறோம். உலகம் அழியும் காலத்தில், நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இறைவனுக்குள் ஒடுங்கும். எங்கும் இருள் சூழும். உலகமே செயலற்றுப் போகும். இப்படி ஒருமுறை நிகழ்ந்த போது, சிவனிடம் பார்வதி தேவி, ஐயனே! மீண்டும் இந்த உயிர்களுக்கு வாழ்வு கொடுங்கள், என வேண்டி, கண் விழித்து பூஜித்தாள். அந்த நாளே சிவராத்திரி எனப்பட்டது. இதனால் தான், நாமும் சிவராத்திரியன்று இரவில், செயலற்று கிடக்கும் உயிர்கள் மீண்டும் வாழ்வு பெற சிவனை வேண்டி பூஜை செய்கிறோம். சிவராத்திரி நாளில் சிவனை வணங்க மங்களம் உண்டாகும். அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கும். எண்ணிய எண்ணம் ஈடேறும். வாழ்விற்குப் பின் மோட்சம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !