உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேடமிட்ட விவேகானந்தர்!

வேடமிட்ட விவேகானந்தர்!

ஒருமுறை பேலுõர் ராமகிருஷ்ணமடத்தில் சிவராத்திரி பூஜை நடந்து கொண்டிருந்தது. அன்று இரவு பூஜையில் சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டார். அவருக்கு ஜடாமுடி வைத்து, சிவனுக்குரிய ஆடை, ஆபரணங்களால் அலங்கரித்தனர். சிவன் வடிவம், விவேகானந்தருக்கு வெகுவாக பொருந்தி இருப்பதாக பூஜையில் பங்கேற்ற அனைவரும் மகிழ்ந்தனர். இதன் பிறகு, ராமகிருஷ்ண மடத்தில் ஒவ்வொரு சிவராத்திரியின் போதும் பிரம்மச்சாரி ஒருவருக்கு சிவவேடம் புனைவதும், சிவகணங்களான நந்தி, பிருங்கி என இருவருக்கு வேடம் புனைவதும், சிவனாக இருப்பவர் தாண்டவம் ஆடுவதும், அக்னி குண்டத்தில் எதிரில் அமர்வதும் பேலுõர் ராமகிருஷ்ண மடத்தில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !