உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகருக்கு ஏற்ற அர்ச்சனைகள்!

விநாயகருக்கு ஏற்ற அர்ச்சனைகள்!

விநாயகப் பெருமானுக்கு மருத இலை கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், பிள்ளை பாக்கியம் உண்டாகும். அரச இலை கொண்டு அர்ச்சித்து வணங்கினால், எதிரிகள் தொல்லை ஒழியும். அகத்தி இலை கொண்டு வழிபட்டால், துயரங்கள் யாவும் நீங்கும். அரளி இலையால் கணபதியை அர்ச்சித்து வழிபட்டால், அன்பு பெருகும். உள்ளுக்குள் அமைதி நிலவும். வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்கினால், இன்பமாகவும் நிம்மதியாகவும் வாழலாம்.

வெள்ளெருக்கு கொண்டு அர்ச்சனை செய்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவர். கண்டங்கத்திரி இலையால் விநாயகரை அர்ச்சித்து வழிபட்டால், லட்சுமி கடாட்சம் பெருகும். அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல சம்பத்துகளும் கிடைத்து, இனிதே வாழலாம். மாதுளை இலையால் வழிபட்டால், புகழுடனும் மரியாதையுடனும் வாழலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !