உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்தது நடக்கும்!

நினைத்தது நடக்கும்!

சென்னை- திண்டிவனம் சாலையில் தொழுப்பேடில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது பெரும்பேர் கண்டிகை. இங்கு முருகப்பெருமான் சிறிய குன்றில் ஆறுமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு வள்ளி சமோதராக காட்சி தருகிறார். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் இங்குள்ள மலைகளின் மீது இளைப்பாறினாராம். இங்கு முருகன் சன்னதிக்கு எதிரே சத்ருசம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பு. விசேஷ நாட்களில் ஆறுவகைப் பழங்களால் இவருக்கு அபிஷேகம் செய்து. ஆறுவகை பிரசாதங்களை நிவேதித்து வழிபட்டால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !