திருவக்கரை கோவிலில் இன்று ஜோதி தரிசனம்!
ADDED :3919 days ago
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியில் உள்ள திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர்
கோவில் வளாகத்தில் உள்ள வக்ர காளி யம்மனுக்கு, மாதந்தோறும் பவுர்ணமி, அமா வாசை
தினங்களில் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான அமாவாசை உற்சவம் இன்று (18ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, பகல் 12:00 மணிக்கு அம்மன் கோவில் கோபுரத்தில் ஜோதி தரிசனம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனை நடக்கிறது.