ஞாயிற்றுக்கிழமையில் கன்னிமார் வழிபாடு!
ADDED :4278 days ago
அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றத்துக்கு அருகில் உள்ளது கன்னிமார் கோயில். திருப்பரங்குன்றம் கோயிலின் தென்பகுதியில், மலைக்குப் பின்புறம், அமைதியே உருவான சூழலில் அமைந்துள்ளது இந்த கோயில். இங்கே, ஒரே கல்லில் ஏழு கன்னிமார்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. திருமணத் தடையால் அவதிப்படும் பெண்கள் இங்கு வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இங்கு வந்து வழிபடுகின்றனர் பக்தர்கள். அந்த நாளில் இங்கு வந்து பொங்கலிட்டு வழிபடுவதும் நடக்கிறது. வைகாசி விசாகத் திருவிழா சிறப்புற நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து, தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். மறுநாள், கன்னிமார் கோயில் திருவிழாவும் விமரிசையாக நடைபெறுகிறது.