தில்லையம்பதியில் திருப்பாவாடை உத்ஸவம்!
ADDED :4278 days ago
சிதம்பரம் தலத்தில் நடைபெறும் முக்கியமான உத்ஸவங்களுள் தைப்பூச நாளில் நடைபெறும் திருப்பாவாடை உத்ஸவமும் ஒன்று. இந்த உத்ஸவத்துக்காக நிலங்களை தானமாகத் தந்து, அந்தக் காலத்தில் சாசனம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்தன்று அரிசி, பருப்பு, சர்க்கரை, தேங்காய், பால் முதலியவற்றைக் கொண்டு பொங்கல் திருவமுது செய்து, தைப்பூசத் திருப்பாவாடை வைபவத்தின்போது இறைவனுக்குப் படைப்பது வழக்கம்.