வாய்க்கு அலங்காரம்!
ADDED :4278 days ago
வாரியார் சுவாமிகள் ஒரு சமயம் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது உடனிருந்த பயணி ஒருவர், அய்யா! மாலை போட்டுக் கொள்ளுங்கள், சட்டை போட்டு கொள்ளுங்கள் என்றனர். அதே நேரம் வடை சாப்பிடுங்கள், காபி சாப்பிடுங்கள் என்றெல்லாம் உண்ணும் பொருட்களைப் பற்றியே சொன்னார். வெற்றிலை பாக்கும் வாய் வழியே வயிற்றுக்குள் போவதுதானே! ஆனால், அதை சாப்பிடுங்கள் எனச் சொல்லாமல், வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளுங்கள். என்பது ஏன்? கேட்டார். அதற்கு வாரியார் சுவாமிகள். பசியை ஆற்றுவதற்காக உண்பதை சாப்பிடுவது என்றும், அலங்காரத்திற்காக அணிவதைப் போட்டுக் கொள்வது எனவும் சொல்கிறோம். வயிறு நிறைய உண்டபின் வாய்க்கு அலங்காரமாகத்தான் வெற்றிலை பயன்படுகிறது எனவேதான் தாம்பூலம் போட்டுக் கொள்ளுங்கள் என்கிறோம் என்றார் அமைதியாக.