முருகனின் ஐந்து அம்சம்!
ADDED :4278 days ago
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், அச்சிறப்பாக்கத்திற்கு முன்னே பிரியும் இடது பாதையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செய்யூர் வளவர்புரி கந்தசுவாமி திருக்கோயில். சிவபெருமானின் சேய் வாழும் ஊரானதால் சேயூர் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தில் முருகன் நான்கு, கரங்களுடன் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். கோயிலைச் சுற்றி வெளிப்புறத்தில் 32 தேவகணங்கள் நிற்கின்றன. முருகப்பெருமானின் ஐந்து அம்சங்களான நிருத்ய, பால, புலந்தர, சிவகுரு, பிரம்மசாரி ஆகிய மூர்த்திகளும் இங்கு அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.