நாம சங்கீர்த்தனம்!
ADDED :4278 days ago
வேலூர் மாவட்டம், கலவையை அடுத்துள்ளது நல்லூர் கிராமம். இங்கே அரசமரத்தின் அருகில் கோதைநாயகி சமேத நல்லூர்நம்பி அருள்புரிகிறார். திருமாலின் வலது மார்பில் லட்சுமியும், வயிறு மற்றும் கிரீடத்தில் யந்திரமும் அமைந்துள்ளது. சிறப்பு, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிலைகள் இவை என்கின்றனர். இங்கே தினமும் பெருமாளுக்கு முன்பு குழந்தைகளால் நாமசங்கீர்த்தனம் நடைபெறுவது சிறப்பு.