அரிவாள் காணிக்கை!
ADDED :4278 days ago
திண்டுக்கல் மாவட்டம், முத்துலாபுரத்தில் உள்ள கருப்பண்ணசுவாமி கோயிலில் அரிவாள் நேர்த்திக்கடன் செய்யப்படுகிறது. பேய், பிசாசு உள்பட எந்தவிதமான தீயசக்திகளாலும் தாங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும். குடும்பத்தில் சுபகாரியங்கள் துரிதமாக நடக்கவும் 3 அடி முதல் 30 அடி வரை நீளமான அரிவாள்கள் இங்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. இதில் இரட்டை அரிவாள். சூலாயுத அரிவாள் பிரசித்தி பெற்றவை.