தீர்த்தனகிரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை!
ADDED :3914 days ago
புதுச்சத்திரம்: தீர்த்தனகிரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் 67வது ஆண்டு மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. விழா கடந்த 18ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. 24ம் தேதி இரவு பஞ்சமுக பூங்காரத்து டன் அம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 25ம் தேதி காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு மாலை 6:00 மணிக்கு மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. 26ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 27ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.