கேரளா அன்னபூரணி!
கேரள மாநிலம் கண்ணுõரில் உள்ள செருகுன்று என்ற இடத்தில் அன்னபூர்ணேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. பழைமையும் பெருமையும் பெற்ற இந்த ஆலயத்தில் அன்ன பாத்திரம், அன்னக்கரண்டி ஏந்திக் காட்சி தருகின்றாள்,தேவி. அக்காலத்தில் இந்த ஆலயத்தில் சோறு குன்று போல வடித்து குவித்து வைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுமாம்! அதனால் இந்தப் பகுதி சோறு குன்று என்று அழைக்கப்பட்டு நாளடைவில் அது செருகுன்று என்று மருவிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் கோயில் நடை அடைக்கும்போது, சாப்பிடாதவர்கள் யாராவது இருக்கின்றனரா என்று வெளியே வந்து கேட்டுத் தெரிந்து கொண்டே நடையடைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆலயத்திற்கு தாமதமாக வரும் பக்தர்கள் பசியினால் வாடாமலிருக்க அன்னதான பிரசாதம் பொட்டலங்களாகக் கட்டி ஆலயத்தின் முன்பு உள்ள ஆலமரத்தில் தொங்கவிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அன்னதானத்துக்கு எடுக்கப்படும் அரிசிக்குத் தகுந்தவாறு பக்தர்கள் சாப்பிட வருவார்களாம். கூடுதலாக அரிசி எடுக்கும் நாளன்று கூடுதல் பக்தர்களும், குறைவாக அரிசி எடுக்கும் நாளன்று குணைவான எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதும் இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இங்கே ஒரே மதிற்சுவருக்குள் இரண்டு தனிக்கோயில்கள் உள்ளன. இரண்டையும் ஒரு தடுப்புச் சுவர் மட்டுமே பிரிக்கிறது. தென்புறம் கிருஷ்ணர் கோயி<லும்; வடபுறம் அன்னபூரணி கோயில் இருந்தாலும் முக்கியத்துவம் அனைத்தும் அன்னபூர்ணேஸ்வரி தேவிக்கே தரப்படுகிறது.
கேரள மாநிலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த 108 பகவதி ஆலயங்களுள் ஒன்றாக இந்த தேவி ஆலயம் கருதப்படுகிறது. கோலதிரி வம்ச அரசர்களின் நாட்டைக் காண விரும்பி, தேவி ஒரு படகில் இங்கு வந்தாராம். இந்த இடத்தின் அழகு தேவியைக் கவர, கிருஷ்ணர் கோயிலை அடுத்து அவள் கோயில் கொண்டதாக செவிவழிச் செய்தி கூறப்படுகிறது. மேலு<ம் அருகி<லுள்ள தளி பரம்பு என்ற இடத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் இந்த ஆலயத்திற்கு தினமும் வருகை தருவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தில் இரவு அத்தாழ பூஜை முடிந்தவுடன் இரண்டு கிண்ணங்களில் நெய்யமிர்து எனப்படும் நைவேத்யம் இறைவி முன்பு படைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மலையாள வருடப் பிறப்பையொட்டி ஏழு நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் ஆறு நாட்கள் தேவி யானையின் மேல் ஏற்றப்பட்டு ஒவ்வொரு நாளும் கிராமத்தின் ஒவ்வொரு திசையை நோக்கி பயணித்து ஆலயத்துக்குத் திரும்புவது விசேஷம். இந்த திருவிழா நாட்களில் பெரிய அளவில் அன்னதானம் நடைபெறுகிறது. அப்போது சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அன்னபூர்ணேஸ்வரி தேவியை தரிசிக்க வருகை தருகின்றனர்.