வினைகள் தீர்ப்பாள் விசாலாட்சி
காசியில் அருள்பாலிக்கும் விஸ்வநாதர், விசாலாட்சியைப் போலவே திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பூ மார்க்கெட் வீதியில், மலர்களின் வாசத்துக்கு மத்தியில் கோயில்கொண்டு அருளாட்சி செய்கிறாள் விசாலாட்சி. வைகாசியில் தேர்த்திருவிழா, ஆனியில் திருமஞ்சனம், புரட்டாசியில் நவராத்திரி விழா, மார்கழியில் திருவாதிரை, மாசி மகா சிவராத்திரிப் பெருவிழா என வருடம் முழுவதும் விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிற து. தீபாவளித் திருநாளின்போது எண்ணற்ற பக்தர்கள், குடும்பத்துடன் இங்கு வந்து, விசாலாட்சியையும் விஸ்வேஸ்வரரையும் வழிபட்டுச் செல்கின்றனர். வருடம் முழுவதும் தினமும் ஒரு புத்தாடை அணிந்து காட்சி தருகிறாள் விசாலாட்சி அம்பாள். தீபாவளி திருநாளுடன் வருகிற கேதார கௌரி நோன்பு எனப்படும் மாங்கல்ய நோன்பு. இங்கே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது. தீபாவளி திருநாளன்று இவர்களை வழிபட்டு காசியில் உள்ள விசாலாட்சியையும் விஸ்வேஸ்வரரையும் வழிபட்ட பலனைப் பெறுவோம்.