உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருடர்பயம் இல்லாமல்.. திறந்தே கிடக்கும் திருத்தலம்!

திருடர்பயம் இல்லாமல்.. திறந்தே கிடக்கும் திருத்தலம்!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அஹமத் நகர் என்னும் ஊரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இருக்கும் சிங்கனாப்பூர். இங்கு சனி பகவான், சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார். இவருக்கு எண்ணெய் அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. ஆண்கள் மட்டுமே தங்கள் கைகளினாலேயே பகவானுக்கு அபிஷேகம் செய்யலாம். பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தொலைவில் நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டும். எண்ணெயினால் தரை வழுக்குவதால், தற்சமயம் எண்ணெய் அபிஷேகம் செய்ய எவரையும் அனுமதிப்பதில்லை. எல்லோருமே தள்ளி நின்றுதான் தரிசனம் செய்யவேண்டும். இந்த ஸ்தலத்தின் விசேஷம் என்னவென்றால் இங்குள்ள வீடு, கடை எவற்றிற்குமே தாழ்ப்பாள் என்பதே கிடையாது! எவ்வளவு விலைமதிப்பில்லாத பொருளாக இருந்தாலும் வைத்த இடத்தில் அப்படியே இருக்கிறது. ஏனென்றால், யாரும் சனி பகவானின் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான்! யமதர்மனுக்கு மூத்தவரான சனி பகவான், தப்பு செய்பவர்களைத் தண்டித்து அவர்களின் அந்திம முடிவைத் தன் சகோதரனிடமே ஒப்படைத்துவிடுகிறார் என்பதால், சனி பகவானை அடைக்கலம் புகுந்தால் மரண பயமும் விலகும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !