வில் ஏந்திய முருகன்!
ADDED :4274 days ago
கரும்பு வில்லை ஆயுதமாகக் கொண்டவன் யார் என்றால், மன்மதன் என்பார்கள். ஆனால், இந்த ஆயுதத்தை வங்காளத்தில் முருகப்பெருமான் வைத்துள்ளார். இங்குள்ள விக்கிரகங்கள் சிலவற்றில் முருகன் கரும்பு வில் ஏந்தியிருப்பதைக் காண முடிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை முருகனின் ஆயுதம் வேல். தன் அன்னையான சக்தியிடம் முருகன் வேல் வாங்கி சென்றதால் வேலில் சக்திதேவியே சக்தியாக அமர்ந்தாள். தஞ்சாவூர் அருகில் உள்ள திருவையாறு ஐயாறப்பர் கோயில் முருகன் சன்னதியில், முருகன் வில்லுடன் காட்சியளிக்கிறார்.