யார் இந்த ஸ்ருதி?
ADDED :3885 days ago
வேத மந்திரங்களை இயற்றிய ரிஷிகளை மந்திரதிரஷ்டார என்று குறிப்பிடுவர். இதற்கு மந்திரங்களைப் பார்த்தவர்கள் என்று பொருள். ரிஷிகள் தியானத்தில் இருக்கும் போது, மின்னல் ஜொலித்தது போல மனதில் உள்ளுணர்வுகள் பளிச்சிடும். அந்த உணர்வுகளை மந்திரங்களாக தொகுத்து சீடர்களிடம் அளித்தனர். சீடர்கள் அதை மனப்பாடம் செய்தனர். ஆனால், இந்த மந்திரங்கள் ஏட்டில் எழுதப்படவில்லை. இதற்கு ஸ்ருதி என பெயர் சூட்டப்பட்டது.ஸ்ருதி என்றால் எழுதப்படாதது என்று பொருள். வேதங்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காக வியாசரால் தொகுக்கப்பட்டது. அதனால் அவருக்கு வேத வியாசர் என்றும் பெயருண்டு.