மலரில் பிறந்தவள்!
ADDED :4271 days ago
திருப்பதி செல்வோர் முதலில் வணங்க வேண்டியது, திருச்சானுõரில் உள்ள அலமேலு மங்கை தாயாரைத் தான். ஆனால், பக்தர்கள் வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பதோடு கிளம்பி விடுகின்றனர். அடிவாரமான கீழ்த்திருப்பதியில் இருந்து 4 கி.மீ., துõரத்தில் திருச்சானுõர் உள்ளது. தாயார் இங்கு தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறாள். வெங்கடேசரின்வேண்டுகோளை ஏற்று, இங்குள்ள குளத்தில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் லட்சுமி தோன்றினாள். இதனால் அவளுக்கு அலர் மேல் மங்கை (மலர் மீது தோன்றியவள்) என்று பெயர் வந்தது. இக்குளத்திற்கு பத்மசரோவர் தீர்த்தம் என்று பெயர். இந்த தாயாரை வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் குறையில்லாத செல்வவளம் உண்டாகும் என்பதுஐதீகம்.