உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்தரங்கமாக இருக்கட்டும்!

அந்தரங்கமாக இருக்கட்டும்!

நாம் ரகசியமாகச் செய்யும் செயல்கள் மற்ற மனிதர்களின் கண்களுக்கு வேண்டுமானால் தெரியாது. ஆனால், ஆண்டவருக்கு தெரியும். நீங்கள் ஒரு தர்மவான் என வைத்துக் கொள்வோம். உங்கள் தர்மத்தை நாலுபேர் பார்க்கும்படியாக செய்தால் தான், அது உலகத்துக்கு தெரியும் என நினைக்கிறீர்கள். இது தற்பெருமையின் வெளிப்பாடு. இவ்வாறு கர்வம் கொண்டவர்களை ஆண்டவர் ஆசிர்வதிப்பதில்லை. நாலு பேருக்கு உதவி செய்து விட்டு, நாற்பது நாட்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் கொடை வள்ளல்கள் மீது தேவன் பிரியமாய் இருப்பார் என்று எதிர்பார்க்கக் கூடாது. தனக்குப் பெயர் வர வேண்டும் என்பதற்காக செய்யும் தர்மச் செயல்களால் மனிதனுக்கு எந்த பலனும் கிடைக்காது. எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருடைய நெருக்கடியில்பங்கு கொள்பவருக்கே ஆண்டவரின் ஆசிர்வாதம்கிடைக்கும். இதுகுறித்து இயேசுகிறிஸ்து,மனுஷர் காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. நீயோ தர்மஞ் செய்யும்போது உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை இடதுகை அறியாதிருக்கக் கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் என்றுகூறுகிறார்.(மத்.6:1-4)அமைதியாக பிறருக்கு உதவும் பழக்கத்தை இனியேனும் மேற்கொள்வோமா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !