நல்ல பதில் பெறுவோம்!
பிரார்த்தனை என்பதுகடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் உரையாடலே. தேவன் மனிதனோடு பேசுவதும், மனிதன் தேவனோடு பேசுவதுமே பிரார்த்தனையின் நோக்கம்.நம்முடைய பிரார்த்தனையை தேவன் தான் கேட்க வேண்டுமே தவிர, மனிதர்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் எந்த வார்த்தையை பயன்படுத்தி ஜெபிக்கிறோம் என்பதை விட, எப்படிப்பட்ட மனநிலையில் ஜெபிக்கிறோம் என்பதே முக்கியம். எவ்வளவு நேரம் ஜெபிக்கிறோம் என்பதை விட, எந்தளவு மனம் ஒன்றி ஜெபிக்கிறோம் என்பதே கவனிக்கத்தக்கது. கர்த்தாவே! நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். என் நாவில் சொல் பிறவாவதற்கு முன்னே, இதோ கர்த்தாவே! அதையெல்லாம் நீர்அறிந்திருக்கிறீர் (சங்.139:1,4) என்ற வசனம் இருக்கிறது.அதாவது, நாம் ஜெபிப்பதற்கு முன்பே, இந்த மனிதன்நம்மிடம் என்ன கேட்கப்போகிறான் என்பதுஆண்டவருக்கு தெரியும். எனவே, நியாயமான வேண்டுதல்களையே ஆண்டவர் முன் வைக்க வேண்டும்.ஏனெனில், அவருடைய சித்தத்திற்குட்பட்டு ஜெபிக்கிற ஜெபங்களை மட்டுமே அவர் கேட்பார். ஜெபத்தை ஏதோ கடமைக்காகச் செய்யால் மனம் ஒன்றி செய்வோம். தேவனிடம்இருந்து நல்ல பதில் பெறுவோம்.