உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளாத்தீஸ்வரர் கோயிலில் நாளை தேரோட்டம்!

காளாத்தீஸ்வரர் கோயிலில் நாளை தேரோட்டம்!

உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் நாளை நடக்கிறது. இன்று காலை சுவாமி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவருகிறது. பிப்., 21 ல் இருந்து தொடர்ந்து மண்டகப்படி நடந்து வருகிறது. காலை மாலை என இரண்டு சமூகத்தவர்கள் மண்டகப்படி நடத்தி வருகின்றனர். இன்று காலை 10.30 மணிக்கு சுவாமியும் அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. தேரோட்டம் நாளை நடக்கிறது. கோயில் விழாவில் ஏராளமானோர் மக்கள் பங்கேற்று சுவாமி, அம்மனை தரிசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !