உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜி.கல்லுப்பட்டியில் பூமிக்குள் கலசம்!

ஜி.கல்லுப்பட்டியில் பூமிக்குள் கலசம்!

தேவதானப்பட்டி:ஜி.கல்லுப்பட்டியில் பட்டாளம்மன் ஓடையில் பூமிக்கு அடியில் கலசம் கிடைத்தை இடத்தை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். பெரியகுளம் ஒன்றியம், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் பட்டாளம்மன் ஓடை தூர் வாரும் பணி நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு பணியாளர்கள் வேலை செய்த போது பூமிக்கு அடியில் கோயில் கலசம் இருப்பது கண்டறியப்பட்டது.

கலசத்தை எடுத்த பணியாளர்கள் அங்குள்ள பட்டாளம்மன் கோயிலில் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கலசம் கண்டெடுத்த போது பானை ஒன்று இருந்தது. அதில் இருந்த தங்க நாணயங்களை சிலர் பங்கு போட்டு பிரித்து எடுத்துக்கொண்டு வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. நேற்று பெரியகுளம் தாசில்தார் ரமேஷ், வி.ஏ.ஓ., சிவசுப்பிரமணி ஆகியோர் கலசம் கண்டெடுத்த பட்டாளம்மன் ஓடையில் ஆய்வு செய் தனர்.தாசில்தார் கூறியதாவது: கலசம் ஒரு துணியால் மூடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இதை புதைத்துள்ளனர். பானை இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. இந்த கலசம் அகல்வாராய்ச்சி துறை வசம் ஒப்படைக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !