ஆனந்தமலை முருகன் கோவிலில் வரும் 28ல் கிருத்திகை பூஜை
ADDED :5529 days ago
ஊட்டி : எம்.பாலாடா கீழ் அப்புக்கோடு ஆனந்தமலை முருகன்கோவிலில் வரும் 28ம் தேதி கிருத்திகை பூஜை, ஏழு ஹெத்தையம்மன், நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை 10.00 மணிக்கு செல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழுஹெத்தையம்மன், நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு கீதா இசை குழுவினரின் பக்தி கானங்கள், மஞ்சக்கம்பை சிவ ஈஸ்வரன் குழுவினரின் பஜனை, 12.00 மணிக்கு ஆருகுச்சி நல்லாசிரியர் பெள்ளன், கன்னேரி புலவர் சுப்ரமணி, குருத்துக்குளி நள்மணி லட்சுமணன் ஆகியோரின் சொற்பொழிவு நடக்கிறது. 2.00 மணிக்கு அன்னதானம், பிரசாத வினியோகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்துள்ளனர்.