திருமலை மூன்றாம் நாள் தெப்பத்தில் மலையப்பசுவாமி!
ADDED :3927 days ago
திருமலை: திருமலையில் வருடாந்திர தெப்பத்திருவிழா நடந்து வருகிறது.ஐந்து நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் மூன்றாம் நாளான்று அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியர் சமேதரராய் வலம் வந்தார். புஷ்கரணி எனப்படும் புனிதநீர் குளத்தை மூன்று முறை வலம்வந்த தெப்பத்தில் அமர்ந்திருந்த சுவாமியை படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.