வால்பாறை கோவிலில் பிரதோஷ பூஜை!
ADDED :4206 days ago
வால்பாறை: வால்பாறையில் நடந்த பிரதோஷபூஜையில், சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. பிரதோஷ பூஜையையொட்டி சுவாமிக்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிேஷக பூஜைகள் நடந்தன. பின்னர் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.