பவானி சங்கமேஸ்வரர் கோவில் ஆயுஷ்ய ஹோம வழிபாடு
பவானி: அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில், 122 கோவில்களில் நேற்று முன்தினம் சிறப்பு பொது வழிபாடு நடந்தது. இதன்படி, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் காலை, 5.30 மணிக்கு, 108 திரவியங்களைக் கொண்டு, ஆயுஷ்ய ஹோமம் மற்றும் சிறப்பு பொது வழிபாடு நடந்தது.மாசி மாதம், குருவாரம், மகம் நட்சத்திரம், கும்ப லக்கினத்தில் நடந்த இந்த வழிபாட்டுக்கு, சுற்றுச்சுழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமை வகித்தார். திருப்பூர் எம்.பி., சத்தியபாமா, பவானி எம்.எல்.ஏ., நாராயணன், ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி நகராட்சி தலைவர் கருப்பணன், யூனியன் தலைவர் தங்கவேலு, ஆவின் துணைத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஹோம வழிபாடும், சங்கமேஸ்வரருக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்து, தீபாராதனை நடந்தது.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் நடந்த வழிபாட்டில், அவர் நீண்ட ஆயுள் பெறவும், வழக்கில் இருந்து விடுதலை பெறவும் வேண்டினர்.அச்சுக்கூட தலைவர் சித்தையன், துணை தலைவர் விஸ்வநாதன், பவானி யூனியன் துணை தலைவர் ரவி, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் முத்துசாமி, அம்மாபேட் டை டவுன் பஞ்., தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.