தில்லைக்காளியம்மன் கோவிலில் சண்டி யாகம்!
சிதம்பரம்: முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் சண்டி ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காளியம்மன் சன்னதி முன் குண்டம் அமைத்து யாகம் செய்யப்பட்டது. இதில் சண்டி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல சிறப்பு ஹோமங்கள் நடந்தது. ஏராளமான அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து 67 சுமங்கலி பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது. பின்னர், கோவிலில் அன்னதானம் வழ ங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்டச் செயலர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குமார், முன்னாள் எம்.பி., இள ங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., அருள், நகர கூட்டுறவு சங்கத் தலைவர் ஜவகர், ஜெ., பேரவை மாவட்டச் செயலர் உமா மகேஸ்வரன், மாவட்ட மருத்துவர் அணி செயலர் டாக்டர் பாலசுப்ரமணியன், நகர செயலர் செந்தில்குமார், முன்னாள் நகர செயலர்கள் சுந்தர், கலியபெருமாள், ஒன்றிய செயலர்கள், பேரூராட்சி செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இன்று தில்லைக் காளியம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு பூஜை நடக்கிறது.