உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேக விழாவிற்கு யாகசாலை பூஜை துவக்கம்!

கும்பாபிஷேக விழாவிற்கு யாகசாலை பூஜை துவக்கம்!

தியாகதுருகம்: புக்குளம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தியாகதுருகம் அடுத்த புக்குளம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கெங்கையம்மன், விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. பக்தர்கள் முயற்சியால் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணி  முடிந்தது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. சுவாமி சிலைகள், விமான கலசம்  யானைமீது வைத்து கரிகோலமாக ஊர்வலம் வந்தது. செந்தில்நாத சிவாச்சாரியார், பாண்டுரங்க சாஸ்திரிகள் தலைமையில் யாகசாலை பூஜை துவங்கின.  நாளை காலை 7.30 மணிக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !