உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனிபிரம்ம உற்சவம் துவக்கம்!

ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனிபிரம்ம உற்சவம் துவக்கம்!

மன்னார்குடி:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவிலில், பங்குனி பிரம்ம உற்சவம், நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தென் துவாரகை என்று போற்றப்படும் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவிலில், இரண்டு தேர் திருவிழா, இரண்டு தெப்பத்திருவிழா நடைபெறும். இங்கு, பங்குனி பிரம்ம உற்சவ விழா, 30 நாட்கள் நடைபெறும். இதில், ஸ்வாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வதும், வெண்ணைத்தாழி, கருடசேவை, தங்க சூர்யபிரபை போன்ற விழாக்கள் பிரசித்தி பெற்றது.பங்குனிப்பிரம்ம உற்சவத்தின் முதல்நாளான நேற்று காலை, 10.30 மணிக்கு, பட்டு சாத்துதல் நிகழ்ச்சியும், கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியின் போது, 100க்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்றனர். இரவு, 9 மணிக்கு கொடிச்சப்பர வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அலுவலர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !