உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் பாதுகை பூஜை

செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் பாதுகை பூஜை

செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் பாதுகை பூஜை மற்றும் சிறப்பு பஜனை நடந்தது. நேற்று காலை சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். பகல் 11 மணிக்கு சுதர்சனம் பாகவதர் தலைமையில் பஜனை நடந்தது. 12 மணிக்கு கோவில் கோவில் பிரகாரத்தில் ஊர்வலம் நடத்தினர். ரங்கபூபதி பொறியியல் கல்லூரி தாளாளர் பூபதி, வழக்கறிஞர் வைகை தமிழ், பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜேந்திரன், இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சிவசுப்பிரமணி, சீத்தாராமன், பூங்கானம், உத்தரவேல், பொன்னுசாமி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !