உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாளையத்து மாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்!

பாளையத்து மாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்!

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் பாளையத்து மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி பால்குடம் ஊர்வலம் நடந்தது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் 23 ந்தேதி நடந்தது. தினமும் மாலை சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை நடந்தது. நேற்று முன்தினம்  மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி  நடந்த பால் குடம் ஊர்வலத்தில் பக்தர்கள் திருக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து  வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மதியம் அன்னதானமும், இரவு திரு விளக்கு பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !