இருமுறை மன்னிக்கணும்!
ADDED :4252 days ago
சிவன் மீதுள்ள ஸ்லோகம் ஒன்றில், திரிபுரம் செய்த சிவனே! நான் செய்த இரு குற்றத்தை மன்னித்து விடு. முற்பிறவியில் உன்னை வணங்காமல் இருந்ததற்கும், அடுத்த பிறவியில் உன்னை வணங்காமல் இருக்கப்போவதற்குமாக இருமுறை மன்னிப்பாயாக. போன பிறவி பற்றி எப்படி தெரியும்என்கிறாயா? அப்போது வணங்கியிருந்தால் மோட்சம் அடைந்திருப்பேன். வணங்காததால் தான் பிறந்துஇருக்கிறேன். அடுத்த பிறவியில் வணங்க மாட்டேன் என்றது ஏன் தெரியுமா? இந்த பிறவியில் உன்னைச் சரணடைந்து விட்டதால், இனி பிறக்க மாட்டேன். அதனால், வணங்க வாய்ப்பிருக்காது.எவ்வளவு அழகான ஸ்லோகம் பாருங்கள்! அது சரி... இதை எழுதியது யாரு? அதுதானே தெரியலே!