பெருமாளும் ஆழ்வாரே!
ADDED :4252 days ago
கும்பகோணத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் சாரங்கபாணி பெருமாள், ஏழு ஆழ்வார்களால் பாடப்பட்டவர். இவருக்கு, ஆராவமுதன் என்றும்பெயருண்டு. அமுதமாகிய அருளை, குறையில்லாமல் வழங்குபவர் என்பது இதன் பொருள். நாதமுனிகள் என்னும் அடியவர் மூலமாக, ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் அரிய நுõல் உலகுக்கு கிடைக்க காரணமானவர் இவரே. எனவே இந்த பெருமாளுக்கு ஆழ்வார் என்ற அடைமொழி சேர்த்து, ஆராவமுதாழ்வார் என்று அழைக்கின்றனர்.