திருமலையில் களைகட்டிய யுகாதி திருவிழா!
ADDED :3911 days ago
திருப்பதி: தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி பண்டிகையாக திருமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலில் குதுாகலமாக கொண்டாடப்பட்டது. காய்கறிகள் பழங்கள் போன்றவைகளால் தோரணங்களும் வளைவுகளும் கண்ணைப்பறிக்கும் அழகுடன் அமைக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக மலர்களால் அமைக்கப்பட்டு இருந்த புஷ்பகலசம் பக்தர்களது பார்வையை கவர்ந்தது. விழாவினை முன்னிட்டு சுவாமி சர்வபூபாள வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.