பிரசாந்தி நிலையத்தில் தங்கும் அறைகள் ஆன்லைன் முன்பதிவு வசதி துவக்கம்!
ADDED :3963 days ago
புட்டபர்த்தி: புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாய்பாபா பக்தர்களின் வசதிக்காக, தங்கும் அறைகள் ஆன்லைன் முன்பதிவு வசதி துவக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள சாய்பாபா பக்தர்கள் பிரசாந்தி நிலையம் வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அறைகள் பிரசாந்தி நிலையத்தில் உள்ளன. இந்த அறைகளை பக்தர்கள் முன்பதிவு செய்ய தற்போது இனையதள வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் www.prasanthinilayam.in என்ற இனையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.