வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா!
ADDED :3845 days ago
புதுச்சேரி: காளத்தீஸ்வரர், வரதராஜப்பெருமாள் கோவில் 12ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நேற்று நடந்தது. புதுச்சேரி மிஷன் வீதி காளத்தீஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோவில் 12ம் ஆண்டு பிரம்மோற்சவம் 25ம் தேதி துவங்கி யது. நேற்று காலை 4:30 மணிக்கு கொடியேற்றம், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடந்தது. வரும் ஏப்., 2ம் தேதி வரை பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும், 3ம் தேதி காலை 6.30 மணிக்கு ரத உற்சவமும், 4ம் தேதி கடல் தீர்த்தவாரி, 6ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.