கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் திருவிழா துவக்கம்
ADDED :3963 days ago
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வர ஸ்வாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. கரூர் கல்யாண பசுதீஸ்வரர் ஸ்வாமி கோவிலில், பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் கிராம சாந்தி பூஜை நடந்தது. நேற்று, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். நாளை முதல், ஏப்ரல், 7ம் தேதி வரை நந்தி வாகனம், பூத வாகனம், ரிஷப வாகனம், கயிலாய வாகனம், பல்லக்கு எழுந்தருளல், ஊஞ்சல் உற்சவம் போன்ற நிகழ்ச்சி நடக்கிறது.