உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலக்கல் மாரியம்மன் திருக்கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள!

சூலக்கல் மாரியம்மன் திருக்கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள!

வால்பாறை: வால்பாறை கலைஞர் நகர் சூலக்கல் மாரியம்மன், பாலவிநாயகர், மண்டி முனீஸ்வரர் கோவிலின், 20ம் ஆண்டு திருவிழா சிறப்பாக  நடந்தது. கோவில் விழாவில் நேற்று முன் தினம் காலை,  11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் நு ாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை, 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நேற்று காலை,  7:00 மணிக்கு மண்டிமுனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக  பூஜையும், தொடர்ந்து அலங்கார பூஜையும் நடைபெற்றன.  மாலை, 3:00 மணிக்கு மஞ்சள்  நீராட்டுவிழா நடந்தது.  விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !