பாலதண்டாயுதபாணி கோவில் லட்சார்ச்சனை விழா
ADDED :3848 days ago
லாலாபேட்டை: கிருஷ்ணராயபுரம், பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவு மற்றும் லட்சார்ச்சனை விழா நடந்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து, ஓராண்டு நிறைவடைந்தது. இதை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை, 7.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை, 9 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் சிவாச்சாரியார்கள் பூஜைகள் மற்றும் யாகத்தை நடத்தினர். இதில், லாலாபேட்டை, மாயனூர், மணவாசி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.