உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நைனார்குப்பத்தில் 3ம் தேதி பங்குனி உத்திரம்!

நைனார்குப்பத்தில் 3ம் தேதி பங்குனி உத்திரம்!

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த நைனார்குப்பம் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா  கொடியேற்றத்துடன் நேற்று  துவங்கியது. புதுச்சத்திரம் அடுத்த நைனார்குப்பம் வள்ளி தேவசேனா சமேத  பாலமுருகன்  கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்  துவங்கியது. தினசரி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பங்குனி உத்திரத் திருவிழா வரும் 3ம் தேதி நடக்கிறது.  அதனையொட்டி காலை 8.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் 2.00 மணிக்கு காவடி எடுத்தல், தேர் இழுத்தல் மற்றும் செடல்  உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !