உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகநன்மைக்காக.. உச்சி மாகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

உலகநன்மைக்காக.. உச்சி மாகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

சோழவந்தான்: சோழவந்தான் பூமேட்டுதெரு உச்சிமாகாளியம்மன்,வடக்கத்திகாளியம்மன் கோயில் பங்குனி உற்சவத்தில் உலக நன்மைக்காக, மழைவேண்டி திருவிளக்குபூஜை நடந்தது. இக்கோயிலில் 5 ம் நாள் உற்சவத்தில் இரண்டு அம்மன்கள் சர்வஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று இரவு 7 மணிக்கு மேல் உலகநன்மைக்காக, மழைவேண்டி பெண்கள் பங்கேற்ற திருவிளக்குபூஜை நடந்தது. ஏற்பாடுகளை தொழிலதிபர் மணிகமுத்தையா, எம்.வி.எம்.,கலைவாணி மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் செய்திருந்தனர். பள்ளி நிர்வாகி வள்ளிமயில் பக்தர்களுக்கு குங்குமம், திருமாங்கல்ய கயிறு பிரசாதம், அன்னதானம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !