ஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :3842 days ago
உடுமலை : ஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவிலில், ராமநவமி முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.உடுமலை, தில்லை நகரில் உள்ள ஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவிலில், ராமநவமி விழா மார்ச் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காகட ஆரத்தி, அபிேஷகம், விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம் மற்றும் ராமநாம சங்கீர்த்தனம், சாய்சத்சரிதம் பாராயணம் உள்ளிட்டவை நடந்தன.ராமநவமி நாளன்று, காலை கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திக்கு மகா அபிேஷகம், சிறப்பு ஆராதனையும், மதியம் அன்னதானமும், மாலை, 6:00 மணிக்கு, சீதா ராமர் திருக்கல்யாண உற்சவமும் நடந்தன. இரவு, 7:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடந்தது; ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.