உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ்மின்னலில் இன்றுசாய்பாபா பிரதிஷ்டை விழா!

கீழ்மின்னலில் இன்றுசாய்பாபா பிரதிஷ்டை விழா!

மேல்மருவத்தூர்;கீழ்மின்னல் கிராமத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபாவின் ஞான பீடத்தில், இன்று காலை 6:00 மணிக்கு, சாய்பாபா பிரதிஷ்டை மற்றும் கலசாபிஷேக விழா நடைபெற உள்ளன.
மேல்மருவத்தூரில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் உள்ள, சிறுபேர் பாண்டி பிரதான சாலை, கீழ்மின்னல் கிராமத்தில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பிரமிட் வடிவ கோவில் (ஷீரடி பாபாவின் ஞான பீடம்) அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில், இன்று காலை 6:00 மணிக்கு, சாய்பாபாவின் பிரதிஷ்டை மற்றும் கலசாபிஷேக விழா, ஆகம விதிகளின்படி, கோவில் பண்டிதர்களால் நடத்தப்பட உள்ளது. விழாவை ஒட்டி, மங்கள இசை, கோ பூஜை, கணபதி ஹோமம், மகாவிஷ்ணு, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், நயனோன் மீலனம் (கண் திறக்கும் நிகழ்ச்சி) நடைபெற உள்ளன.

தொடர்ந்து, திரிமூர்த்தி சொரூபம், சாய்நாதர் அனுக்கிரக யாகம், பூர்ணாஹூதி, கலசாபிஷேகம், மகா அபிஷேகம், மகா ஆரத்தி; காலை 10:00 மணிக்கு, சென்னை சிவசுப்ரமணிய பாகவதர் குழுவினரின், சாய்நாம பஜனை நடைபெறும்.பிற்பகல் 12:00 மணிக்கு ஆரத்தியும், அன்னதானமும் நடைபெற உள்ளன.ஏற்பாடுகளை, ஷீரடி சாய்பாபா ஞானபீடம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !