உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொரவி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

தொரவி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், இளநீர், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தீஸ்வரருக்கு அருகம் புல் மாலை மற்றும் பச்சரிசி பிரசாதம் வைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தது.

அபிஷேகம் மற்றும் பூஜைகளை புதுச்சேரி சிவநேய செல்வர் சரவணன் செய்திருந்தார். தொரவி மற்றும் சுற்றுப்புற பகுதியிலுள்ள பெண்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை தொரவி ஊராட்சி மன்ற தலைவி நாகேஸ்வரி சங்கர், சிவனடியார்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !