அம்மன் பவனி வர தயாராகிறது தேர்!
ADDED :3841 days ago
உடுமலை : மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, அம்மன் பவனி வரும் தேர் சீர்படுத்தும் பணி, நடக்கிறது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 24ல் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 31ல் திருவிழா கம்பம் போடப்பட்டது. இன்று, திருவிழா கொடியேற்றப்படுகிறது.ஏப்., 11ம் தேதி வரை நடக்கும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், ஏப்., 9ல் நடக்கிறது. அம்மன் பவனி வரும் தேர், நிலையில் இருந்து, நேற்று வெளியில் கொண்டு வரப்பட்டு, சீரமைக்கப்பட்டு வருகிறது.